இன்று புதிதாய்ப் பிறந்தேன் ஆயினும்
என்னை இழக்கின்றேன்!
உன் கன்னத்துடன்- நீ
என்னை உரசும்
பொழுது..
இன்னும்
சாய்ந்து விழுகின்றேன்!
உன் இதயஓசை உணர ..
ஆயினும்
இன்னும் அழுகின்றேன்..
நம் இரு இதழ்களின்
துரத்தை குறைக்க ..
என்னை சிரிக்க
வைக்க நீ - குழந்தை ஆகிறாய்
உன் சிரிப்பிற்காக
நான் சிரிக்கிறேன்..
இப்படிக்கு
இன்று புதிதாய்ப் பிறந்து
உன் கன்னத்தோடு
உறவாடும்
நான் :)

No comments:
Post a Comment