Apr 23, 2011
காதல் சுவடுகள்
மழை சாரல்
முகத்தில் தவழ
அது கூட
உரைக்காமல்
அவள் பார்வையில்
சிறைப்பட்டு
இருந்தேன் ...
மேகத்தை விளக்கி
விழும் மின்னலை
போல்
வந்து விழுந்தது
அவள் கேள்வி ..
"என்னை எந்த
அளவுக்கு காதலிக்கிறாய் ?"
ஆயிரம் முறை
பதில் உரைத்தும்
அலுக்காத கேள்வி ..
இதற்க்கு முற்று புள்ளி
வைக்கும் பதிலாக
"என் முதல் காதலியை போல் "
சற்றும் யோசிக்காமல்
என் உதட்டில்
இருந்து பிறந்தது ...
என் முதல் காதலி ..
அவள் அன்பின்
பாதி நீ..
அவள்
அழகின் மீதி
நீ..
அவள்
கருணையின்
எச்சம் நீ ..
அவள்
கனிவின்
கையளவு நீ ..
எனக்கு
உயிர் கொடுத்ததால்
ரத்த பந்தத்தின் படி
அவள் என்
தாயுமானவள் ஆனால் ..
எந்த
பந்தமும்
இல்லாமல் எனக்கு
நீ அவள் அருமையை
உணர்த்தியதால்
நீ
அவளுக்கு நிகரானாய் ..
முடிக்கும் முன்
மூடினால் என் இதழை
அவள் இதழோடு ..
காதல் சொர்க்கம் தான்
-அருண்
Apr 10, 2011
Apr 1, 2011
காதல் சுவடுகள்
------------------------
உன் அமைதியான
கண்களில்
என்றும் இல்லாத
சோகம் ..
வாழ்கையே
வெறுப்பாக இருக்கிறது
அருண்.. உனக்கு?
வேலை பளுவில்
நீ உதிர்ந்த கேள்வி
இது ..
வாழ்க்கையை
நேசிக்க
கற்றுகொண்டேன்
நீயே
என் வாழ்க்கை
ஆன பின் ..
உன்னை எப்படி
நான்
வெறுப்பது ..
உனக்கும்
சொல்லி தர
ஆசை தான்
குருவுக்கு
பாடம் சொல்ல
பக்குவ படாத
காதல் கிறுக்கன்
நான் ...
- அருண்
Subscribe to:
Posts (Atom)




