Mar 8, 2012

இபோழுதெல்லாம்
நம்
காதலில்
மௌனம்தான்
அதிகம் பேசுகிறது :(

கால் கடுக்க
நின்றவள்..
இன்று
நான் வரும் முன்
காற்றோடு மறைகிறாள் :(
வாயாடி
என் வாயடைத்தவல் ..
இன்று
கண்ணாடி போல்
மௌனத்தை
பிரதிபலிக்கிறாள்...

நேர் பார்வை
கொண்ட
என்
புதுமை பெண் ..
என் முகம்
பார்க்க மறுக்கிறாள்..
நிச்சயித்த
மறுநாளே
காதல் மாயை
களைந்து விட்டதா
என்று
நான் குழம்பிய
வேலையில் ..
இது
நம்
திருமணத்திற்கான
"தவம்"
ரோஜா விழியில்
பனித்துளி படர
தெளிவு படுத்தி விட்டால்
என்
புதுமை பெண்
-
அருண்