Feb 24, 2012



காதல் சுவடுகள் 

நிச்சியம் முடிந்த 
மறுநாளே 
வந்து விழுந்தன
கேள்விகள் ...

பொண்ணு
கருப்பா சிவப்பா ?...

அழகான கருப்பு என்றேன் 
கர்வத்தோடு ....
"
"வெண்"நிலவு 
கருப்பாக இருந்தால் 
இன்னும் எவ்வளவு 
அழகாக இருக்கும்
என்று 
யோசிக்க வைத்தவள் 
அல்லவா என்னவள்" ...

கருப்பா!!!! முகம் சுழித்தனர் ..

இவர்களுக்கு 
எப்படி 
சொல்லுவேன் ..

நிலவின் அழகு 
முழுமை பெறுவது 
பகல் வானத்திலா ?
இல்லை 
"கருப்பு"  வானிலா????
நீங்கள் சொல்லுங்கள் ..

என் காதலை 
முழுமை பெற 
வைத்தவள் 
என் 
"கருப்பு நிலா"

-
அருண்