Sep 3, 2011

காதல் சுவடுகள்

காதல் ஒரு
புதிர்- அதில் விழாதவனுக்கு..
காதல் ஒரு
அவஸ்தை - அதில் சிக்கியவனுக்கு..
காதல் ஒரு
வலி - அதில் தோற்றவனுக்கு..

இவர்களுக்கு
சில விதிகள்
புரிவதில்லை ...

கருவறை அவஸ்தையை
பொறுத்தவனே
உலகை காண்கிறான் ..

மரண வலியை
பொறுத்தவனே
சொர்கத்தை அடைகிறான் ..

காதல் புதிரா
என்று ஆராய்வதை விட ..
அதன் புனிதத்தை
நேசித்தால்

நீயும் உணர்வாய்
காதல் சொர்கம்தான் என்று !!!

அருண்

No comments:

Post a Comment