Jul 29, 2011

மனிதனாய் வா தமிழா

மனிதனாய் வா தமிழா

வானத்தை விட்டு
பிரிந்த
மேகம்
மழை துளியாய்
சிதறி கிடப்பது போல ,

உலகு எங்கிலும்
அகதியாய்
சிதறி கிடக்குது
எந்தன் இனம் ...

சமச்சீர் கல்விக்காக
ஏங்கி கிடக்குது
நம் பிள்ளை
இங்கே ...

தாய் பால்
வற்றி உணவுக்காக
ஏங்கி கிடக்குது
முள்வேலியில்
நம் இனம் பிணமாய்
முப்பது மையில்களுக்கு
அப்பால் ..

இங்கு
முக நூலில்
நாம் முழ்கி
இருக்க ...

எம் புலியின்
கால் தடத்தை
பார்த்து
நடுகிய சிங்களவன் ..

இன்று
கொக்கரிக்கிறான்
கொத்து குண்டுகள்
செய்த
மாயம் ..

குள்ள நரி
இனத்திற்கு
சிங்க கொடி
எதற்கு ...

கொத்து கொத்தாக
சாயிந்த போதும்
கலங்காத
புலி இனம் ..

இன்று
காத்திருக்கு நம்
எழுச்சிகாக ..

மெரினாவிற்கு
வாருங்கள்
மனித சங்கலியாய்
இணைவோம் ...

ஆதிக்க இனத்தை
ஆயுள் கைதியாய்
கட்டி போடுவோம் ..

தமிழனாய்
வர வேண்டாம்
மனிதனாய் வாருங்கள் .

.....

அருண்

No comments:

Post a Comment