Jan 19, 2013


பொங்கலோ பொங்கலோ 

உன் உழவனுகாக நீ 
மறித்து வைத்தாய் என் தாயை  ..
மறந்து விடாதே 
நானும் உந்தன் இனமடா (உழவன்) ..
தை பொறந்தாச்சு 
மனசு நிறைய வில்லை ...
பொன்னி தாய்  நீ மரித்தால்  
என்ன ...
எங்கள் மகிழ்ச்சி 
கடல் வற்றாதது டா ...
உலகுக்கு சோறுடைத்த 
சோழ நாடு ..
சோகத்தில் முழுகி 
கிடக்கு  ஈழத்தில் 
செத்து  கிடக்கு ..
மண் வாசனை 
மணக்கும் என் 
நிலத்தில் 
நின்று கொண்டு 
கடைசி கண்ணீர் துளியோடு 
இறைக்கு  வைக்கிறேன் 
சூரிய பொங்கல் 
கை விடுவாயோ  மழை கொடுப்பாயோ 
உந்தன் பாடு !!!
உலகின் கடைசி 
மறவர் குடி நாங்கள் 
எங்கள் நிலம் 
காய்ந்தாலும் 
நெஞ்சம் காயாது 
ஈரம் குறையாது 
வசந்த கால கனவோடு 
கொண்டாடுகிறோம் 
பொங்கலோ பொங்கல் 

அருண் 

No comments:

Post a Comment