காதல் சுவடுகள்
மறுநாளே
வந்து விழுந்தன
கேள்விகள் ...
பொண்ணு
கருப்பா சிவப்பா ?...
அழகான கருப்பு என்றேன்
கர்வத்தோடு ....
"
"வெண்"நிலவு
கருப்பாக இருந்தால்
இன்னும் எவ்வளவு
அழகாக இருக்கும்
என்று
யோசிக்க வைத்தவள்
அல்லவா என்னவள்" ...
கருப்பா!!!! முகம் சுழித்தனர் ..
இவர்களுக்கு
எப்படி
சொல்லுவேன் ..
நிலவின் அழகு
முழுமை பெறுவது
பகல் வானத்திலா ?
இல்லை
"கருப்பு" வானிலா????
நீங்கள் சொல்லுங்கள் ..
என் காதலை
முழுமை பெற
வைத்தவள்
என்
"கருப்பு நிலா"
-
அருண்

No comments:
Post a Comment